Bigg Boss வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் முன்னாள் பிக்பா்ஸ் போட்டியாளர்கள்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 24, 2019 10:07 AM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டதால் முகேன் நாமினேஷன் எதிலும் சிக்காமல் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்கிறார்.

இதனையடுத்து இது கடைசி வாரம் என்பதால் முகேன் தவிர மற்ற எல்லோரும் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் செய்யப்பட்டார்கள். இந்நிலையில் விஜய் டிவி புதிய புரொமோவை ஒளிபரப்பியது.
அதில், பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களான யாஷிகா மற்றும் மகத் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார்கள். 'உங்க வீடு நல்லா இருக்குயா' என யாஷிகா ஃபீல் பண்ண, டாஸ்க் எல்லாம் நல்லா விளையாடுங்க என மகத் அட்வைஸ் செய்கிறார்.
BIGG BOSS வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் முன்னாள் பிக்பா்ஸ் போட்டியாளர்கள் வீடியோ
Tags : Yashika Aannand, Mahat, Bigg Boss 3, Kavin, Losliya