“சூர்யா Control பண்ணிட்டாரு.. But என்னால முடியல..”- வைரலான மீம் குறித்து தளபதி விஜய்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 24, 2019 04:01 PM
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட மீம் குறித்து நடிகர் விஜய் தனது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்.19ம் தேதி தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு லைவ் பாடல் Performance, குட்டி கதை, சமூக பிரச்சனை, நெகட்டிவ் ட்ரோல்ஸ் உள்ளிட்ட பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துக் கொண்டார்.
அப்போது, சமீபத்தில் மிகவும் பிரபலமான வைகைப்புயல் வடிவேலுவின் காண்ட்ராக்டர் நேசமணி குறித்த மீம் திரையிடப்பட்டது. இதனை பார்த்த நடிகர் விஜய், “ஃபிரண்ட்ஸ் படத்தில் இந்த சீன் நடித்தபோது என்னால முடியல. ஆனா, சூர்யா ஒரு வழியாக Control பண்ணிட்டாரு.. வடிவேலு சார், விவேக் சாரோட படம் பண்றது ரொம்ப ரொம்ப கஷ்டம். இந்த சீன்ல சுவற்றுப்பக்கம் திரும்பி இருக்க மாதிரி தான் இருக்கும். அப்படி தான் சீன முடிச்சாங்க.. ஃப்ரெண்ட்ஸ் படம் என்னோட Favourite படம்” என்றார்.