சிம்புவின் லேட்டஸ்ட் படம்... அரெஸ்ட்டான பிரபல ஹீரோ.. காரணம் சொன்ன இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிக்கும் மஹா படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

simbu hansika srikanth maha new poster is out

ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மஹா. ஹன்சிகாவின் 50-வது படமாக தயாராகி வரும் மஹா திரைப்படத்தை யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பைலட் உடையில் வெளியான அவரது போட்டோக்கள் ஆன்லைனில் ஹிட் அடித்தது.

இந்நிலையில் மஹா படத்தில் இருந்து புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் ஶ்ரீகாந்த் இடம்பெற்றுள்ளார். கையில் விளங்குடன் அவர் சிறைச்சாலைக்குள் இருக்க, தம்பி ராமைய்யாவும் கருணாகரனும் அவர் மீது துப்பாக்கியை நீட்டியபடி இருக்கிறார்கள். எல்லாருமே வில்லன் தான், எல்லாருமே ஹீரோ தான். யார் யாரிடம் கதை சொல்கிறார்கள் என்பதை பொறுதே அது அமையும் எனவும் இயக்குநர்  ஜமீல் குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor