''ஒரு வழியா ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டாங்க'' - விஜய் டிவி புகழ் பிரபல நடிகையின் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த மூன்று மாதங்களாக நடைமுறையில் உள்ள ஊரடங்கில், சமீபத்தில் வணிகம் சார்ந்த செயல்பாடுகளுக்கு அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அளித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக சின்னத்திரை படப்பிடிப்புகளை அதிகபட்சம் 60 நபர்களை கொண்டு நடத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Vijay TV Aayudha Ezhuthu fame Sharanya shares Shooting spot Video | விஜய் டிவி ஆயுத எழுத்து புகழ் சரண்யா வெளியிட்ட வீடியோ

இந்நிலையில் மெல்ல சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக சின்னத்திரை தொடர்கள் புதிய எபிசோட்கள் எதுவும் இல்லாமல், துவக்கத்தில் இருந்து மறு ஒளிபரப்பு செய்யப்பட்டன. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம். இந்த சீரியலின் படப்பிடிப்பு தற்சமயம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சரண்யா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ பகிர்ந்துள்ளார். அதில், '3 மாசத்துக்கு பிறகு ஒரு வழியா ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டாங்க, Happy Shooting' என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

The troublesome two !! 😛 From the sets of Ayutha ezhuthu @anandselvan10

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on

தொடர்புடைய செய்திகள்

Vijay TV Aayudha Ezhuthu fame Sharanya shares Shooting spot Video | விஜய் டிவி ஆயுத எழுத்து புகழ் சரண்யா வெளியிட்ட வீடியோ

People looking for online information on Aayudha Ezhuthu, Sharanya, Vijay tv will find this news story useful.