பிரபல தொகுப்பாளினி டிடி, அதற்கு முன் சீரியல்கள், ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடையே பரீட்சையமாகியிருந்தாலும் 'காஃபி வித் டிடி' நிகழ்ச்சி அவரது டிரேட் மார்க்காக அமைந்தது.
![Vijay TV fame Dhivyadharshini share a pic on instagram about leg fracture | விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி விபத்து குறித்து உருக்கம் Vijay TV fame Dhivyadharshini share a pic on instagram about leg fracture | விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி விபத்து குறித்து உருக்கம்](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vijay-tv-fame-dhivyadharshini-share-a-pic-on-instagram-about-leg-fracture-photos-pictures-stills.jpg)
அந்த நிகழ்ச்சியில் பிரபலங்களுடன் ஜாலியாக அவர் உரையாடும் விதம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. டிவி மட்டுமல்லாமல் 'நள தமயந்தி', 'பவர் பாண்டி', 'சர்வம் தாளமயம்' படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இடது காலில் கட்டுப்போடப்பட்டிருக்கும் நிலையில் ஸ்டேண்ட் ஒன்றை பிடித்தபடி நடந்து வருகிறார். அந்த பதிவில், கடந்த சில வாரங்களாக இப்படித் தான் இருக்கிறது. லாக்டவுனிற்கு பிறகு இது நடந்தது. எனது இடது கால் பாதத்தில் முறிவு ஏற்பட்டது. இதிலிருந்து என் மனதை மாற்ற முயற்சி செய்தேன். எழுதுவது, ஒடிடியில் நேரம் செலவிடுவது உள்ளிட்டவற்றை செய்துவந்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக பலம் பெற்று இந்த பதிவை எழுதியிருக்கிறேன். இதில் இருந்து சீக்கிரமே மீண்டு உங்களை விரைவில் சந்திக்கிறேன்'' இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அவருக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/B_hhrlJDNUI/?utm_source=ig_web_copy_link