கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் மற்ற தொழில்களைப் போலவே திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பணிகள் ஏதும் நடைபெறாததால் தினசரி ஊதியம் பெறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த மே 11 ஆம் தேதி முதல் திரைப்படம், சின்னத்திரை தொடர்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை நடத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து படப்பிடிப்புகள் தவிர்த்து இதர பணிகளான டப்பிங், எடிட்டிங் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி தரப்பில் தங்கள் நிறுவனம் சார்ந்து செயல்படும் தொழிலாளர்களின் நலன் கருதி கடந்த ஏப்ரல் மாதம் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளதாம். அதற்காக குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ரூ.75 லட்சம் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த தொகையின் மூலம் சீரியல்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒரு மாதம் ஊதியம் பெறுவார்கள்.
இதனை குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் டிவியின் ஜெனரல் மேனேஜர் கிருஷ்ணன் குட்டி, சீனியர் வைஸ் பிரெசிடென்ட் பாலச்சந்திரன், புரோகிராமிங் ஹெட் பிரதீப் மில்ராய் பீட்டர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளது.