பிரபல சீரியல் நடிகையின் வீட்டிலேயே நடைபெற்ற எளிமையான திருமணம் - வெளியான ஃபோட்டோஸ் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'அன்புடன் குஷி' தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தத் தொடரில் பிரஜன் - மான்ஷி ஜோசி ஹீரோ, ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர்.

இந்தத் தொடரில் நடிகை சுரேகா சுகுமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகை சுரேகா 'தேவையானி' என்ற கன்னடத் தொடரிலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது சகோதரர் சரணுக்கும், ராஜேஸ்வரிக்கும் அவரது வீட்டில் எளிமையாக நடைபெற்றது.
இதனையடுத்து திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், எங்கள் அண்ணனின் திருமணம் வீட்டிலேயே எளிமையாக , பாதுகாப்பாகவும் நடைபெற்றிருந்தது. குறைவான நபர்களே திருமணத்தில் பங்கேற்றனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : Vijay tv, Anbudan Kushi, Surekha Sukumar