அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து 2017-ம் ஆண்டு வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் பெரிதாக பேசப்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன.

மெர்சல் படத்தில் இடம் பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்...’ பாடலை மட்டும் உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். விஜய் கதாநாயகன், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளர் என்பதால் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்து ‘மெர்சல்’ படத்தின் ஆடியோ உரிமை வாங்கப்பட்டது.
அடுத்து விஜய், ஏ.ஆர்.ரகுமான், அட்லி என இதே கூட்டணியில் ‘விஜய் 63’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது .
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின்பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதியன்று வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
We are happy to announce that #Thalapthy63 Audio rights is with SonyMusicSouth @Atlee_dir @arrahman pic.twitter.com/dZCGkd4xhe
— Archana Kalpathi (@archanakalpathi) June 6, 2019