'பயில்வான்' சுதீப்பிற்காக இதனைச் செய்த விஜய் சேதுபதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நான் ஈ', 'புலி' போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் கிச்சா சுதீப். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் இவர், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நயன்தாரா ஆகியோருடன் 'சேரா' படத்தில் நடித்துவருகிறார்.

Vijay Sethupathi released a first look poster of Kiccha Sudeep's Pailwan

மேலும் சல்மான் கானுடன் 'தபாங் 3' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபு தேவா இயக்குகிறார். இந்நிலையில் இவர் தற்போது 'பயில்வான்' என்கிற படத்தில் நடித்துவருகிறார்.

தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் தமிழ் வெர்ஷனின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தை எஸ்.கிருஷ்ணா இயக்கியுள்ளார். அர்ஜூன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சுதீப்புக்கு ஜோடியாக அகான்க்ஷா சிங் நடித்துள்ளார்.