துருவ் விக்ரம் அடுத்ததாக இந்த இயக்குநரின் படத்தில் நடிக்கவிருக்கிறாரா? - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் 'அர்ஜூன் ரெட்டி' தமிழ் ரீமேக்கான 'ஆதித்யா வர்மா' படத்தில் நடித்துவருகிறார்.  இந்த படத்தை கிரிசய்யா இயக்குகிறார்.

Dhruv Vikram not to act director Vijay's film

இந்த படத்தில் துருவ் ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல நடிகை பிரியா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு ரதன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இதனையடுத்து துருவ் விக்ரம் இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியது. சியான் விக்ரமின் மேனேஜர் யுவராஜ் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக மறுத்துள்ளார்.

ஆதித்யா வர்மா படத்தை ஏற்கனவே வர்மா என்கிற பெயரில் இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து பாலா விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.