''இது விஷாலுடைய நடிகர் சங்கம் கிடையாது'' - பிரபல நடிகர் ஆவேசம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வருகிற 23 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது.

Karunas about South Indian Artist Association and Vishal

இந்நிலையில் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''நடிகர் சங்கம் என்பது விஷாலுடைய சங்கம் கிடையாது. நடிகர் சங்கம் என்பது கார்த்தியுடைய சங்கம் கிடையாது. நடிகர் சங்கம் நடிகர்களுக்கான சங்கம்.

அதில் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு விருப்பம் இருந்தால் நீங்கள் அந்த பணியை செய்யலாம்.  சங்கத்தின் செயல்பாடுகளில் தனிப்பட்ட ஒருவரின் மேல் உள்ள விருப்பு வெறுப்புகளை சங்கத்திற்குள் கொண்டு வருவதை நான் ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன்.

உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லையென்றால் தனிப்பட்ட முறையில் அந்த பிரச்சனையை தீர்த்துக்கொள்ளுங்கள்.  உங்கள் தனிப்பட்ட காரியங்களை ஈகோவாக எடுத்துக்கொண்டு நான் பெரியவனா நீ பெரியவனா என காட்டுவதற்கு நடிகர் சங்கம் இடம் கிடையாது''  என்று தெரிவித்துள்ளார்.

''இது விஷாலுடைய நடிகர் சங்கம் கிடையாது'' - பிரபல நடிகர் ஆவேசம் வீடியோ