ஸ்டூடியோல யாரு இருக்கானு பாருங்க...! தளபதி-63 சாங்ஸ் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடித்த 'தளபதி 63' படத்தின் இரண்டு பாடல்களை ஸ்க்ரீனில் முதல்முதலில் பார்த்தது நான் தான் என பெருமையுடன் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

AR Rahman keeps himself busy with Vijay's Thalapathy 63

அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பாடல்கள் ரிக்கார்டிங் பணி மற்றும் பின்னணி இசையின் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பதிவு செய்த ஒரு டுவிட்டில் 'தளபதி 63' படத்தின் இரண்டு பாடல்களின் எடிட்டிங் பணி முடிந்துவிட்டதாகவும், இந்த இரண்டு பாடல்களையும் முதல்முதலில் பார்த்தது நான் தான் என்ற பெருமை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு அவர் பதிவு செய்துள்ள ஒரு புகைப்படத்தில் இயக்குனர் அட்லியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.