இந்த படத்தின் ஷூட்டிங்கை பேக்-அப் செய்த லேடி சூப்பர் ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வந்த மலையாள திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

Nayanthara - Nivin Pauly starring 'Love Drama Action' film shooting wrapped up

‘பேட்ட’, ‘Mr.லோக்கல்’ திரைப்படங்களை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படம் வரும் ஜூன்.14ம் தேதி ரிலீசாகவுள்ளது. இப்படத்தை சக்ரி டொலெட்டில் இயக்கியுள்ளார். இது தவிர அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’, சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.

இதனிடையே, மலையாளத்தில் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் முதன்முறையாக மலையாளா ஸ்டார் நிவின் பாலியுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் தயான் ஸ்ரீனிவாசன் இயக்கும் இப்படத்தில் நடிகர் அஜு வர்கீஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம்  தயாரிப்பாளராகவும் அஜு வர்கீஸ் அறிமுகமாகிறார். மேலும், வினீத் ஸ்ரீனிவாசன், பாசில் ஜோசப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.