‘யார தொடுற பாத்து வரணும், சாத்தி கெளம்பு காத்து வரணும்’ - டாப் டக்கர் தளபதி வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டாப் டக்கர்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

Top Tucker video song from Thalapathy Vijay's Sarkar directed by AR Murugadoss

சர்கார் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். மேலும், ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.6ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் இப்படம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘டாப் டக்கர்’ என்ற பாடலின் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் இசை உரிமத்தை பெற்ற சோனி நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘டாப் டக்கர்’ பாடல் வீடியோவை பகிர்ந்துள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதிய இப்பாடலை மோகித் சௌஹான் பாடியுள்ளார்.

தற்போது, ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி-விஜய் கூட்டணியில் ‘தளபதி 63’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட்டிற்காக தளபதி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், விஜய் இறுதியாக நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டாப் டக்கர்’ பாடல் வீடியோ வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘யார தொடுற பாத்து வரணும், சாத்தி கெளம்பு காத்து வரணும்’ - டாப் டக்கர் தளபதி வீடியோ! வீடியோ