Bigil Breaking: வெறித்தனம்!! இன்று முதல் விஜய்யின் பிகிலு சத்தம் ஆரம்பம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 07, 2019 01:27 PM
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் முக்கிய பணி தொடங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியிருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. நடிகர் விஜய் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியை தொடங்கியிருப்பதாக தெரிகிறது.
நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.