Breaking: கார்த்திக் நரேனின் பக்கா Plan - அருண் விஜய்யின் 'மாஃபியா' அப்டேட் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 05, 2019 03:27 PM
'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் நரகாசூரன் படத்தை இயக்கினார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படம் 'மாஃபியா'. இந்த படத்தில் அருண் விஜய், பிரசன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர். இந்த படத்தை லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கவிருக்கிறார்.
எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கி 11 நாட்கள் நடக்கவுள்ளது அத்துடன் இப்படம் நிறைவுப் பெறுகிறது.
Tags : Arun Vijay, Karthik Naren, Mafia