தல-தளபதியின் Plus-Minus என்ன தெரியுமா? - பிரபல ஹீரோயின் ஓபன் டாக்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னர்களாக வலம் வரும் நடிகர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோரின் பலம் மற்றும் பலவீனம் குறித்து நடிகை காஜல் அகர்வால் பிரத்யேகமாக நம்மிடையே பகிர்ந்துக் கொண்டுள்ளார்.  

Kajal Aggarwal about ajith, Vijay's Strength and weakness

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஆக.15ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

காமெடி கலந்து ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள ‘கோமாளி’ திரைப்படத்தின் ரிலீசையொட்டி நடிகை காஜல் அகர்வால் Behindwoods-ன் Personals வித் தாரா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது பேசிய காஜல், ‘கோமாளி’ திரைப்படத்தில் தனது கேரக்டர் குறித்தும், தன்னுடன் நடித்த பிரபலங்கள் குறித்தும் ஒரு சில விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

அஜித் பற்றி கூறுகையில் “சிறந்த மனிதர் அது தான் அவருடைய பலம், அவரது குடும்பம் தான் அவரது பலவீனம், அதை பலவீனம் என்று கூற முடியாது, ஆனால் குடும்பத்தை சார்ந்து இருப்பார்” என்றார். அதேபோல், விஜய் பற்றி கூறுகையில், ‘விஜய்யோட Spontaneity, ரொம்ப நேச்சுரலாக இருப்பது அவருடைய பலம். பலவீனம் என்னவென்று தெரியவில்லை” என்றார்.

நடிகர் அஜித்துடன் விவேகம் திரைப்படத்திலும், விஜய்யுடன் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’, ‘மெர்சல்’ ஆகிய திரைப்படங்களில் காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தல-தளபதியின் PLUS-MINUS என்ன தெரியுமா? - பிரபல ஹீரோயின் ஓபன் டாக் வீடியோ