“குடி நட்டுக்கும் உட்டுக்கும்.. எழுதினவன் எங்க தமிழ் படிச்சான்..?" - ஜாக்பாட் ஸ்னீக் பீக்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 07, 2019 12:49 PM
‘குலேபகாவலி’ படத்தை தொடர்ந்து கல்யாண் இயக்கத்தில் வெளியான நடிகை ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ திரைப்படத்தில் இருந்து 3வது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆக்ஷன் கலந்த காமெடி படமாக வெளியான இப்படத்தில் ஜோதிகா மற்றும் நடிகை ரேவதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன், யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.எஸ்.ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்துள்ளார்.
இப்படம் கடந்த ஆக.2ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் 3வது ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மொட்ட ராஜேந்திரனின் கை வண்ணத்தில் வழி காட்டும் போர்டில் அவர் கிறுக்கிய தமிழும், அதை ஆனந்தராஜ் காமெடியாக விமர்சிப்பதும் ஸ்னீக் பீக்கின் ஹைலைட்டாக உள்ளது.
“குடி நட்டுக்கும் உட்டுக்கும்.. எழுதினவன் எங்க தமிழ் படிச்சான்..?" - ஜாக்பாட் ஸ்னீக் பீக் வீடியோ