Eviction-க்கு பிறகு நியூட்ரல் ரேஷ்மா வெளியிட்ட வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 06, 2019 05:36 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய 5வது போட்டியாளரான ரேஷ்மா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கி வார வாரம் பல சுவாரஸ்யங்களுடன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதலாவதாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் ஆகியோர் வெளியேறினர்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளில் நியூட்ரலாக கருத்துக் கூறி இரு தரப்பிலும் நல்ல பொண்ணு இமேஜை தக்க வைத்துக் கொண்டவர் ரேஷ்மா. இந்நிலையில், கடந்த வாரம் யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக ரேஷ்மா பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.
தற்போது தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ரேஷ்மா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், ‘சமூக வலைதளங்களில் நிறைய Positive ஆன கமெண்ட்ஸ் கிடைச்சிருக்கு., மக்கள் எனக்கு பெரிய ஆதரவு கொடுத்ததுக்கு நன்றி கடன்பட்டிருக்கேன். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பளித்த பிக் பாஸ் டீம் மற்றும் விஜய் டிவிக்கு நன்றி. அவங்க மூலமா பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாய்ப்பு கிடைச்சது. எல்லாருக்கும் நன்றி தெரிவிச்சிக்குறேன். நல்லவங்களுக்கு நல்லதே நடக்கும். எல்லாருக்கும் நன்றி’ என கூறியுள்ளார்.
EVICTION-க்கு பிறகு நியூட்ரல் ரேஷ்மா வெளியிட்ட வீடியோ வீடியோ