Breaking: அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகும் பிரபலம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 05, 2019 04:24 PM
‘அவள் ஒரு தொடர் கதை’ திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் விஜயகுமார்.

அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பல மெகா தொடர்களில் நடித்துள்ளார்.
தற்போது மூவிங் ஸ்லைட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி திரைப்படங்கள் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவிருக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விஜயகுமாரின் மகனும், பிரபல ஹீரோவுமான அருண் விஜய் நடிக்கிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக ‘தடம்’ திரைப்படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கிறார்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் ஆக.19ம் தேதி தொடங்கி 35 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர அருண் விஜய் நடித்துள்ள பாகுபலி ஹீரோ பிரபாஸின் ‘சாஹோ’ திரைப்படம் வரும் ஆக.30ம் தேதி ரிலீசாகிறது. மேலும், ‘அக்னிச் சிறகுகள்’, ‘பாக்ஸர்’, ‘மாஃபியா’, மற்றும் கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.