விஜய்யின் அப்பா எஸ்ஏசி இயக்கத்தில் ஜெய் நடிக்கும் 'கேப்மாரி' - 50 மாடல் அழகிகளுடன் பாடல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 07, 2019 12:48 PM
தளபதி விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் ஹீரோவாக நடித்து வரும் படம் கேப்மாரி என்கிற CM. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா, அதுல்யா ரவி நடிக்கின்றனர். இது ஜெய்யின் 25 வது படமாகும்.

இந்த படத்தில் சத்யன், தேவதர்ஷினி, விவிங்ஸ்டன், பவர் ஸ்டார், சித்தார்த் விபின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஜீவன் இந்த பாடலுக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் ஹரிச்சரன் பாடிய என் காதல் ராணி என்ற பாடல் தற்போது படமாக்கப்பட்டுள்ளதாம். இந்த பாடலில் 50க்கும் மேற்பட்ட மும்பை மாடல்கள் பங்கேற்றனராம்.
Tags : Jai, Athulya Ravi, SA Chandrasekar, Capmaari