'ரிலீஸுக்காக வழிவிட்ட எல்லோருக்கும் நன்றி' - பிரபாஸ் - அருண் விஜய்யின் சாஹோ டீம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி இரண்டு பாகங்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷரத்தா கபூர் நடித்துள்ளார்.

Arun Vijay and Prabhas's Saaho team thanks to other producers

இந்த படம் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் அருண் விஜய் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  மேலும் இந்த படத்தில் நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி கிருஷ்ண ரெட்டி, புரோமோத் மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த படத்தின் வெளியீட்டிற்காக மற்ற படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டதாக கூறி நன்றி தெரிவித்துள்ளனர்.