Pattamboochi

“அடுத்த பெரிய அறிவிப்பு… “எதிர்பார்ப்பை எகிற வைத்த வெங்கட் பிரபுவின் தூள் பறக்கும் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெங்கட்பிரபுவின் சமூகவலைதளப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Venkat prabhu post on big announcement tomorrow

Also Read | விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘வர்ணம்’ … கவனம் ஈர்த்த குறும்படம் ரிலீஸ் update

மாநாடு…

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி இருந்தது.டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை அனைத்து தரப்பிலான மக்களுக்கு புரியும் வகையில், நேர்த்தியாக இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு. மாநாடு திரைப்படமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 117 கோடி ரூபாய் வசூல் செய்து பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, மிகவும் குறுகிய காலத்தில், நடிகர் அசோக் செல்வனை வைத்து அவர் இயக்கிய மன்மத லீலை திரைப்படமும், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகியது. இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்த மன்மத லீலை திரையரங்குகளிலும் ஓடிடியிலும் நல்ல கவனம் பெற்றது.

VP 11

இந்த இரு படங்களுக்குப் பிறகு தற்போது வெங்கட்பிரபு அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் அடுத்து வெங்கட் பிரபு இணையும் இருமொழி படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு குறித்த புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது.  வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும். அதே போல, தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார். நாகசைதன்யா தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஒளிப்பதிவாளர் S.R. கதிர் செயல்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளையராஜா..

ஜூன் 23 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தின் பாடல் பதிவு சென்னையில் சமீபத்தில் துவங்கி உள்ளதாகவும், இப்படத்தில் இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சம்மந்தமாக இளையராஜாவின் ஸ்டுடியோவில் அவரோடு இயக்குனர் வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி இந்த தகவலை மேலும் உறுதிபடுத்தியது. 

Venkat prabhu post on big announcement tomorrow

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வெங்கட்பிரபு…

இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவில் “நாளை காலை 9.01 மணிக்கு மிகப்பெரிய அறிவிப்பு” என தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கும் அப்டேட் அல்லது இளையராஜா இசையமைப்பது சம்மந்தமான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | நயன்தாரா பெயரை தமிழ்ப் படுத்தினால் ‘உடுக்கண்ணி’-யா? - ட்ரெண்ட் ஆகும் கவிஞரின் போஸ்ட்.!

தொடர்புடைய இணைப்புகள்

Venkat prabhu post on big announcement tomorrow

People looking for online information on Big announcement, Venkat Prabhu, Venkat prabhu post, Venkat prabhu post on big announcement will find this news story useful.