Veetla Vishesham Others Page USA

The wait is over… 'தளபதி 66' ஃபர்ஸ்ட் லுக் எப்போ?... ரசிகர்களை குஷியாக்கிய official அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் தளபதி 66 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Thalapathy 66 movie first look update official announcement

தளபதி 66

பீஸ்ட் திரைப்படத்துக்குப் பிறகு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இந்த படம் ஆக்ஷனுக்கு நிகராக குடும்ப செண்ட்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. வம்சி இந்த படத்தை இயக்குகிறார்.

படப்பிடிப்பு..

கடந்த சில மாதங்ஜளுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர். இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் இணைந்துள்ளார். தமன் முதல் முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார்.  நடிகர் ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பது உறுதியாகியுள்ளது.

Thalapathy 66 movie first look update official announcement

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது. அப்போது ஒரு பாடல்காட்சி படமாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் ஐதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அப்போது படத்தில் நடிக்கும் நடிகர்களான பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்டவர்களுடன் விஜய் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது.

 

பிறந்தநாள் அப்டேட்…

இந்நிலையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை அடுத்து ‘தளபதி 66’ படத்தின் அப்டேட் வெளியாகலாம் என ரசிகர்களால் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கும் விதமாக சமீபத்தில் விஜய்யை வைத்து இயக்குனர் வம்சி ஒரு நாள் முழுவதும் படத்துக்கான போட்டோஷூட் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பிறந்தநாளுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது.

விஜய் பின்புறமாக திரும்பி இருக்கும் போஸ்டரை வெளியிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 21 ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Thalapathy 66 movie first look update official announcement

Thalapathy 66 movie first look update official announcement

People looking for online information on Rashmika Mandanna, Thalapathy 66, Vamsi, Vijay will find this news story useful.