விஜய் நடிக்கும் #Thalapathy66 ரிலீஸ் எப்போ.? ஃபோட்டோவுடன் வெளியான செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசியாக, நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்த நடிகர் விஜய், அடுத்ததாக வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

Vijay Thalapathy 66 movie first schedule wrapped

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்து வருகிறார்.

விஐய் மற்றும் ராஷ்மிகா ஆகியோருடன் ஏராளாமான நட்சத்திர பட்டாளங்களும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

Also Read | கல்யாணம் எப்போ??.. 1st Invitation யாருக்கு? Behindwoods விருது மேடையில் விக்னேஷ் சிவன் Exclusive

ஏராளமான நட்சத்திரங்கள்..

சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, பிரபு, ஷ்யாம், ஜெய சுதா, சங்கீதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள், தளபதி 66 படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதே போல, தளபதி 66 திரைப்படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். விஜய் படத்திற்கு அவர் இசைமையப்பது இது தான் முதல் முறை.

தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் வைத்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில், நடிகர் விஜய்யுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.

Vijay Thalapathy 66 movie first schedule wrapped

தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அப்டேட்

இந்நிலையில், ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தளபதி 66 படப்பிடிப்பு, தற்போது முடிவடைந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனம், அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்ததாகவும், இதில் பல முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டடுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதில் ஆவலாக உள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Thalapathy 66 movie first schedule wrapped

இவை அனைத்தையும் விட, 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு தளபதி 66 திரைப்படம் வெளியாகும் எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இருக்கும் புகைப்படம் ஒன்றையும், ட்விட்டரில் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், தளபதி 66 படப்பிடிப்பை முடித்து விட்டு, சென்னை விமான நிலையத்தில் விஜய் இருந்த புகைப்படங்களும், அதிக அளவில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Vijay Thalapathy 66 movie first schedule wrapped

Also Read | "எனக்கு அமீரை புடிக்கும், ஆனா" தயங்கி சொன்ன பாவனி.. ஆட்டம் போட்ட அமீர்.. அப்படி என்ன சொன்னாங்க?

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Thalapathy 66 movie first schedule wrapped

People looking for online information on Rashmika Mandanna, Thalapathy 66 Movie, Thalapathy 66 movie first schedule, Thalapathy 66 Movie updates, Vijay, Yogi Babu will find this news story useful.