Pattamboochi

தாய்லாந்து நாட்டில் ஹனிமூன்.. நயன்தாரா - விக்னேஷ் சிவன் வெளியிட்ட LATEST டூர் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தேனிலவுக்காக தாய்லாந்தில்  தங்கியுள்ளனர்.

Nayanthara Vignesh Shivan Recent Thailand Honeymoon Pictures

Also Read | நயன்தாரா பெயரை தமிழ்ப் படுத்தினால் ‘உடுக்கண்ணி’-யா? - ட்ரெண்ட் ஆகும் கவிஞரின் போஸ்ட்.!

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகாபலிபுரத்தில் ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இயக்குனர் மணிரத்னம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி, கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அனிருத், அட்லி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தனர்.  ​​​

Nayanthara Vignesh Shivan Recent Thailand Honeymoon Pictures

சமீபத்தில், புதுமணத் தம்பதிகள் தாய்லாந்தில் இருப்பதாக விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கம் தெளிவுபடுத்துகிறது. இது தவிர, தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

தேனிலவில் இருந்து தொடர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

Nayanthara Vignesh Shivan Recent Thailand Honeymoon Pictures

இந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவன்,  நயன்தாராவை அரவணைத்த படி கண்ணத்தை கொஞ்சுவது போலவும் அமைந்திருந்தது. இந்த புகைப்படங்களில் கருப்பு வெள்ளை நிற உடையில் நயன்தாரா காட்சியளிக்கிறார்.  இந்த செல்ஃபி புகைப்படங்களை விக்னேஷ் சிவன் எடுத்துள்ளார். கண்ணத்தில் கை வைத்து இருக்கும் நயன்தாரா புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் எடுத்துள்ளார்.

Nayanthara Vignesh Shivan Recent Thailand Honeymoon Pictures

நயன்தாரா விரைவில் ஷாருக்கானின் ஜவான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் நடிக்கவுள்ளார். மேலும் அவர் பல படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.  மறுபுறம், விக்னேஷ் சிவன் இப்போது அஜித்துடன் ஏகே 62 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள படத்திற்கு தயாராகி வருகிறார்.

Also Read | அடடே.. 777 சார்லி படத்த பார்த்துட்டு ரஜினிகாந்த் சொன்ன ரிவ்யூ... நெகிழ்ந்து போன நடிகர்!

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara Vignesh Shivan Recent Thailand Honeymoon Pictures

People looking for online information on Nayanthara, Nayanthara Vignesh Shivan Recent Thailand Pictures, Vignesh shivan will find this news story useful.