Pattamboochi

அடடே.. 777 சார்லி படத்த பார்த்துட்டு ரஜினிகாந்த் சொன்ன ரிவ்யூ... நெகிழ்ந்து போன நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஷித் ஷெட்டி நாயகனாக நடித்திருக்கு கன்னட திரைப்படம் ‘777 சார்லி’

Superstar Rajinikanth called 777 Charlie actor Rakshit Shetty

Also Read | விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் இணைந்த பிரபல 80s ஹீரோயின்! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

இந்த படம், தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில்  நாயகனாக நடித்துள்ள ரஷித் செட்டி தான் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்.

கதையின் நாயகன் தர்மா. அவனுடைய சிறு வயதில் அம்மா,அப்பா,தங்கை ஆகிய மூவரும் ஒரு கார் விபத்தில் இறந்து விடுகின்றனர். அந்த வயதில் அவனுக்கு ஏற்பட்ட இந்த பேரிழப்பால் தர்மா தனிமை விரும்பியாக வளர்கிறான். அவனின் ஒரே துணை எந்நேரமும் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் சார்லி சாப்ளின் திரைப்படங்கள் மட்டும் தான்.

அவனுடைய உணவு என்பது மதியம் கேண்டின் சாப்பாடு & இரவில் மூன்றே இட்லி. அந்த முன்று இட்லியிலும் ஒரு இட்லி மிச்சமாகி குப்பைத் தொட்டியில் வந்து விழும். நாய் ஒன்று அவன் வீட்டு எதிரில் உள்ள குப்பைத் தொட்டியில் இந்த இட்லியை உண்ண காத்துக் கொண்டிருக்கும். இரண்டு இட்லி அவனுக்கு ஒரு இட்லி நாய்க்கு.  ஒரு நாள் அடாத மழையில் அந்தநாய் அவன் வீட்டிற்குள் தஞ்சம் அடைய முயன்ற பொழுது, விரட்டி விடுகிறான் தர்மா. நாயை விரட்டியடித்த தர்மாவும் விரட்டப்பட்ட நாயும் பின்னாளில் நண்பர்களாக திரிவது தான் 777 சார்லியின் கதை.

Superstar Rajinikanth called 777 Charlie actor Rakshit Shetty

இந்த படத்தில் சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி ஷெட்டி, டேனிஷ் சைட், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கிரண் ராஜ் இயக்கியிருக்கும் இந்த படம் கடந்த ஜூன் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தினை நேற்று இரவு பார்த்து விட்டு சூப்பர் ஸ்டார் நடிகர் ரஷித் செட்டியை தொலைபேசியில் அழைத்து படம் பற்றி பேசி பாராட்டியுள்ளார். இதனை டிவிட்டர் மூலம் நடிகர் ரஷித் ட்வீட் செய்துள்ளார்.

Superstar Rajinikanth called 777 Charlie actor Rakshit Shetty

அதில், "இந்த நாளின் துவக்கம் என்ன ஒரு அற்புதமானது! ரஜினிகாந்த் சார் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் நேற்று இரவு 777சார்லியைப் பார்த்தார் மற்றும் படத்தைப் பார்த்து வியந்தார். அவர் படத்தின் மேக்கிங் தரம், ஆழமான வடிவமைப்புகள் மற்றும் குறிப்பாக தனது கருத்தை வெளிப்படுத்தினார். க்ளைமாக்ஸைப் பாராட்டினார். சூப்பர் ஸ்டாரிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்பது மிகவும் அற்புதமானது. மிக்க நன்றி ரஜினிகாந்த் சார்" என தெரிவித்துள்ளார்.

Superstar Rajinikanth called 777 Charlie actor Rakshit Shetty

சிலநாட்களுக்கு முன் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த படத்தை திரையரங்குக்கு சென்று பார்த்துவிட்டு அழுது கொடுத்துள்ள பேட்டி வைரலாகியது. 777 சார்லி படத்தை பார்த்த மங்களூரு காவல்துறையினர், அந்த படத்தை பார்த்ததும் தாங்கள் வைத்திருக்கும் போலீஸ் மோப்ப நாய்க்கு கூட சார்லி என்று பெயரிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் வேற மாரி 2nd LOOK போஸ்டர்.. எப்படி இருக்கு?

தொடர்புடைய இணைப்புகள்

Superstar Rajinikanth called 777 Charlie actor Rakshit Shetty

People looking for online information on 777 Charlie, Rajinikanth, Rakshit shetty, Super Star, Super Star Rajinikanth will find this news story useful.