Pattamboochi

Ilaiyaraaja: "உங்கள் இதயத்தை தொட்ட தனுஷை பாராட்டுறேன்..!" - Fans-உடன் பேசிய இளையராஜா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

80கள்,90கள் தொடங்கி இப்போது வரை 21-ஆம் நூற்றாண்டின் தவிர்க்க முடியாத இசை மேதைமையுடன் விளங்கி வருகிறார் மேஸ்ட்ரோ இளையராஜா.

Ilaiyaraaja praises dhanush while answering to fans

Also Read | ‘மாரி-ல்லாம் Part 2 வருது.. பவர் பாண்டிக்கு எடுக்க கூடாதா.?’.. வீட்ல விசேஷம்.. சத்யராஜ் அல்டிமேட்.!

ஏழ்மை பின்புலத்தில் இருந்து வந்து உலக மற்றும் இந்திய இசையமைப்பாளர்கள் வியக்கும் வகையிலான ஆச்சர்யங்களையும் சாதனைகளையும் இசையில் நிகழ்த்திய காட்டியவர் இளையராஜா. அதைவிடவும் பெரும் சாதனையாக இன்றளவும் இளையராஜாவின் பழைய பாடல்களை கூட சகஜமாக கேட்கும் சமூகமாக தமிழ்ச் சமூகம் இருக்கிறது.

இந்நிலையில் ரசிகர்களுடன் கேள்வி பதில் செக்சனில் ஈடுபட்ட இசைஞானி இளையராஜா, அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகவும், மனம் திறந்தும் பதில்களை கூறியுள்ளார். அந்த வகையில் ரசிகர் ஒருவர்,  “ராக் வித் ராஜா கான்செர்டில் தனுஷ் பாடிய பாடலை மீண்டும் மீண்டும் கேட்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Ilaiyaraaja praises dhanush while answering to fans

இதற்கு பதில் அளித்துள்ள இளையராஜா, “நன்றி, ஒருத்தர் கம்போஸ் பண்ணி, அது உங்க மைண்ட்ல நிக்குதுனா, அது உங்க மைண்டோட கெப்பாசிட்டி இல்ல. அது கம்போஸரின் ஆழம். அதுதான் உங்களை வந்து தொடுகிறது என்றால், அதுதான் உயர்ந்த கலைப்படைப்பு, அந்த கலைப்படைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.. தனுஷை பாராட்டுகிறேன், உங்கள் இதயத்தை தொட்டதற்காக..” என்று குறிப்பிட்டுள்ளார்.

Ilaiyaraaja praises dhanush while answering to fans

இளையராஜா இசையில் அடுத்ததாக சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் மாயோன் திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதைத் தவிர, இசைஞானி இளையராஜா, வெற்றிமாறன் இயக்கும் விடுதலை திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.

தற்போது இசைஞானி இளையராஜா அளித்திருக்கும் பேட்டி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Also Read | நயன்தாரா பெயரை தமிழ்ப் படுத்தினால் ‘உடுக்கண்ணி’-யா? - ட்ரெண்ட் ஆகும் கவிஞரின் போஸ்ட்.!

தொடர்புடைய இணைப்புகள்

Ilaiyaraaja praises dhanush while answering to fans

People looking for online information on FansTweet, Ilaiyaraaja, Ilaiyaraaja Exclusive, Raja Answers will find this news story useful.