விஜய் மாஸ்டர் செல்ஃபி - இதோ நம்ம தளபதியின் Most Wanted செல்ஃபி !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய் எடுத்த செல்ஃபி போட்டோ வெளியாகியுள்ளது.

vijay shares the selfie he took in neyveli during master shooting

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய் எடுத்து செல்ஃபி தற்போது வெளியாகியுள்ளது. மாஸ்டர் படப்பிடிப்பின் போது பலர் விஜய்யை காண நெய்வேலி சுரங்கம் அருகில் கூடினர். இதையடுத்து, விஜய் அருகில் இருந்து வேன் மீது ஏறி அவர்களுக்கு கை காட்டியதோடு, தனது ஃபோனில் செல்ஃபி படம் எடுத்தார். இணையத்தில் இருக்கும் பலரும் விஜய் எடுத்த செல்ஃபியை எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில், அந்த செல்ஃபியை விஜய் தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Entertainment sub editor