விஜய் சேதுபதி வில்லன் Mode - அடுத்தடுத்து வெளியான இரண்டு போஸ்டர்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படத்துக்கு முன்பாக விஜய் சேதுபதியின் 'க/பெ ரணசிங்கம்' படம் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விருமாண்டி இயக்கியுள்ளார்.

Vijay Sethupathi's First Look Poster out from Uppena

அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் 'கடைசி விவசாயி', 'மாமனிதன்', 'லாபம்', யாதும் ஊரே யாவரும் கேளீர்', 'துக்ளக் தர்பார்'  என அடுத்தடுத்து படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக அவர் தெலுங்கில் நடித்துள்ள படம் 'உப்பெனா'.

இந்த படத்தின்  விஜய் சேதுபதியின் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் அவர் ரயனம் என்ற பெயர் கொண்ட கேரக்டரில் நடித்துள்ளார். பஞ்சா வைஷ்ணவ் தேவ் மற்றும் கிருத்தி ஷெட்டி ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.  இந்த படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படம் வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment sub editor