’ரஜினிக்கு ஒரு நீதி, விஜய்க்கு ஒண்ணா?’ – தயாநிதி மாறன் மக்களவையில் ஆவேசம்!
முகப்பு > சினிமா செய்திகள்சமீபத்தில் விஜய் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்ட் இணையத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியது. ஆனால் அது முடிந்து நெய்வேலி என்.எல்.சி. ஷூட் ஸ்பாட்டுக்கு திரும்பிய விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாகனம் ஒன்றின் மீது ஏறிநின்ற விஜய் செல்ஃபி எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

இதைத் தொடர்ந்து இன்று மக்களவையில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் விஜய்யின் ஐடி ரெய்டு விவகாரம் பற்றி பேசினார். ”தேர்தல் வருவதால் வருமான வரித்துறை ரஜினிக்கு 1 கோடி ரூபாய் வரிச்சலுகை அளித்துள்ளது. ஆனால், விஜய் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தியதுடன், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே போய் அவரை அழைத்து வந்துள்ளனர்’ என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜய் மீண்டும் நெய்வேலி திரும்பிவிட்டதையடுத்து மாஸ்டர் ஷூட்டிங் விறுவிறுப்பாக தொடர்ந்து நடைபெற்று வருக்கிறது. ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ’தலைவர் 168’ படத்தில் நடித்து வருகிறார். இவருடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.