'நீங்கள் கேட்ட பாடல்' விஜய் சாரதியை நியாபகம் இருக்கா? - சேரன் வெளியிட்ட ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90 கிட்ஸ்களுக்கு அப்போதைய முக்கிய பொழுதுபோக்குகளில் ஒன்று சன் டிவி நிகழ்ச்சிகளை காண்பதாகத் தான் இருக்கும். நீங்கள் கேட்ட பாடல், பெப்சி உங்கள் சாய்ஸ், தங்க வேட்டை, மைடியர் பூதம் என அவர்களது சிறுவயதை முழுவதும் ஆக்கிரமித்தது சன் டிவி நிகழ்ச்சிகள் தான்.

Bigg Boss Fame Cheran shares a Photo with Neengal Ketta Paadal Vijay Sarathy

டிவி சேனல்கள் குறைவாக இருந்த அந்த காலகட்டத்தில் அவை தான் பெரும்பாலான 90 கிட்ஸ்களின் பால்யத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தன. இன்றளவும் அவர்களுக்கு பசுமையான நிகழ்வுகளாக அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

குறிப்பாக 'நீங்கள் கேட்ட பாடல்' நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் விஜய் சாரதியை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பல்வேறு சுற்றுலாத் தலங்களில் பின்னால் நடந்து கொண்டே பேசும் அவரது ஸ்டைல் மிக பிரபலம். மேலும் விக்ரமாதித்யன் சீரியலில் வேதாளமாக நடித்து அசத்தியிருப்பார்.

தற்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வி மக்களின் மனதில் எழும் கேள்விகளில் ஒன்று. அதற்கு விளக்கமளிக்கும் விதமாக இயக்குநரும் நடிகருமான சேரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ''என்னுடைய நீண்டநாள் நண்பர் விஜய்சாரதி.. தற்போது இலங்கையில் சக்தி தொலைக்காட்சியில் பணிபுரிகிறார்.. அவர் அவரது இலங்கை நண்பர்களோடு இன்று என்னைக்காண வந்திருந்தார்.. நீண்ட நாளாக என் பிரியத்தற்கு உரித்தான சாரதி...'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor