விஜய்யின் மாஸ்டர் டீமின் அடுத்த ப்ளான்! - வுட்றா வண்டிய... Neyveli to ...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

vijay vijay sethupathi's master neyveli shoot details

நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், அர்ஜுன் தாஸ், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் டெல்லி, ஷிமோகா ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதையடுத்து படத்தின் முக்கியமான காட்சிகள் நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் படமாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நெய்வேலியில் நடந்து வந்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாஸ்டர் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாஸ்டர் திரைப்படம் இந்த வருட சம்மருக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment sub editor