சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்தில் இருந்து 'கண்ணால் மோதாதே’ வீடியோ சாங் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்’டகால்டி’ படத்துக்கு பிறகு சந்தானம் நடித்து காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் சர்வர் சுந்தரம். இந்த படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, பிகே வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து புரோ வீடியோ சாங் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து தற்போது ’கண்ணால் மோதாதே’ பாடல் வெளியாகியுள்ளது. சித் ஸ்ரீராம் பாடியுள்ள ரொமாண்டிக் பாடலான இதைக் காண கீழே உள்ள வீடியோவை சொடுக்கவும்.
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்தில் இருந்து 'கண்ணால் மோதாதே’ வீடியோ சாங் இதோ! வீடியோ
Tags : Santhanam, Server Sundaram