ஒரு தேவதை வந்துவிட்டாள்..! மாஸ்டர் ரைட்டர் சொல்லும் புதுவரவு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ரத்னகுமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

vijay's master writer rathna kumar shares about his new born baby

மேயாதமான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். இத்திரைப்படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பளிக்க, இதையடுத்து அமலா பாலை வைத்து ஆடை படத்தை இயக்கினார். ஆடை இல்லாமல் ஒரு பில்டிங்குள் மாட்டிக்கொள்ளும் பெண்ணின் போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை பெற்றது. இதையடுத்து தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில், திரைக்கதை உருவாக்கத்தில் ரத்னகுமார் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் ரத்னகுமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். இப்போது மூத்த மகள் குரலினியாளின் ரியாக்‌ஷன் இப்படி தான் இருக்கும் என ஒரு புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Entertainment sub editor