ஆத்தி என்னா ஸ்பீடு..!- ஜெட் வேகத்தில் பறக்கும் விஜய் சேதுபதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி-ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் ‘லாபம்’ திரைப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

Vijay Sethupathi -Shruthi Haasan's Laabam film first schedule wrapped up

‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட அறமும் அரசியலும் சார்ந்த படங்களை தந்து தேசிய விருது வென்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ‘லாபம்’ திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் ராஜபாளையத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. அதிரடி ஆகஷன் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர்கள் கலையரசன், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘லாபம்’ திரைப்படத்தை தவிர ‘மாமனிதன்’, ‘சிந்துபாத்’, இயக்குநர் விஜய் சந்திரின் படம் என விஜய் சேதுபதி பிசியாக இருக்கிறார். நடிகை ஸ்ருதிஹாசனும் ‘சிங்கம் 3’ படத்திற்கு பின் சிறிய இடைவெளிவிட்டு ‘லாபம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்துள்ளார்.