காஃபி வித் டிடி உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்தி வழங்கி ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் 'நள தமயந்தி', 'விசில்', 'சர்வம் தாளமயம்', 'பவர் பாண்டி' ஆகிய திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.

தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம், சிம்ரன் உள்ளிட்டோர் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்திலும் அவர் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செய்றோம். ஒரு வருஷத்துக்கு அப்றம் ஆங்கரிங் செய்றோம் ( இப்போதான் ஷோ குடுத்தாங்க பா) என்னுடைய விருப்பமான நிகழ்ச்சி என்கிட்ட மோதாதே சீசன் 2 சிறப்பான தரமான ஃபன் பன்றோம் வருகிற ஞாயிற்றுக்கிழமை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இப்போ ஜாலியா புரோமோ பாருங்க. பாத்துட்டு சொல்லுங்க. என்றார்.
மேலும் அவர் புரோமோவையும் பகிர்ந்துள்ளார். அதில், கொல காண்டுல இருக்கேன். மவனே விளையாடாம விடமாட்டேன் என பேட்ட ரஜினி ஸ்டைலில் வசனம் பேசுகிறார்.
Seirom oru varushathuku apram anchoring seirom (ipodan show kuduthanga paa) for my favourite show #EnkittaModhadhe season2 sirapana tharamana Fun panrom from next Sunday 6.30pm 😍😍ipo joliya promo parunga 🤗pathutu solunga 😘😘@vijaytelevision pic.twitter.com/Ru0m5jpX7P
— DD Neelakandan (@DhivyaDharshini) May 14, 2019