ஜெட் வேகத்தில் பறக்கும் மக்கள் செல்வன் - அடுத்தப்படம் பற்றிய முக்கிய அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வந்த ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi SangaThamizhan film shooting wrapped

விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர சூரி, நாசர் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

முதன்முறையாக இரட்டை வேடங்களில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், தற்போது காரைக்குடியில் நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளட்து. இறுதி நாள் ஷூட்டிங்கின் போது படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தவிர விஜய் சேதுபதி நடிப்பில், ‘லாபம்’, ‘மாமனிதன்’,தெலுங்கில் ‘சைரா நரசிம்மா ரெட்டி’, ‘க/பெ.ரணசிங்கம்’, முத்தையா முரளிதரனின் பயோபிக், ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட திரைப்படங்கள் கைவசம் உள்ளன.