Bigg Boss Tamil 3 - 'பிக் பாஸ் வீட்டிற்குள் வர விஜய் சேதுபதி தான் காரணம்' - உண்மையை உடைத்த Popular Star
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 01, 2019 12:07 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 37ம் நாள் எபிசோடில், இயக்குநர் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் பின்னணி குறித்து பகிர்ந்துக் கொண்டார்.

போடு ஆட்டம் போடு என்ற லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கை தொடர்ந்து மொட்ட கடிதாசி டாஸ்க்கில் போட்டியாளர்கள் மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் நேரடியாக கேட்க முடியாமல் போன கேள்விகளை சீட்டில் எழுதி கேட்கலாம் என்று கூறப்பட்டது. அப்போது திரைத்துறைக்குள் நுழைந்து பல வெற்றிகளையும், பெயரையும், புகழையும் சம்பாதித்த சேரன், எதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வர வேண்டும் என்ற கேள்வியை சரவணன் எழுப்பியிருந்தார்.
அதற்கு சேரன், ‘பெயர், புகழ், விருதுகள் பல வாங்கியிருந்தாலும், இறுதியாக நான் சுவைத்த வெற்றி என்பது ‘ஆட்டோகிராஃப்’ தான். அதன் பிறகு ஒவ்வொன்றும் போராடி நான் சினிமா பயணத்தை ஓட்டினேன். சினிமவை தவிற வேறு எதுவும் எனக்கு தெரியாது. பிக் பாஸ் செல்வது பற்றி பலவிதமான ஆலோசனைகள் இருந்தன.
அப்படி இருக்க, நடிகர் விஜய் சேதுபதி தான் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகும்படி கேட்டுக் கொண்டார். ‘பட்டி தொட்டி முதல் வெளிநாடுகள் வரை பல கோடி மக்கள் பார்க்கும் இந்நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்களுடனான தொடர்பை நெருக்கப்படுத்திக் கொள்ள முடியும் என்றார்’.
‘வாழ்க்கையில் ஆரம்பக்கட்டம் முதல், சினிமா எடுத்தது, சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள், கடன், என பல்வேறு அனுபவங்களை வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அந்த அனுபவத்தை மக்கள் முன்னிலையில் கூறும் போது அது அவர்களுக்கு பாடமாக அமையும் எனக் கூறி இந்நிகழ்ச்சி போகச் சொன்னவர் விஜய் சேதுபதி தான்’ என சேரன் விளக்கம் அளித்தார்.