விஜய் சேதுபதி நடிக்கும் பயோபிக் படத்தில் இணைந்த பாகுபலி ஸ்டார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தில் பாகுபலி நடிகர் ராணா டகுபதி இணைந்துள்ளார்.

Rana Daggubati to co-produce Vijay Sethupathi satrring cricketer Muttiah Muralitharan's Biopic

சுமார் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்களை வீழ்த்தி, அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் முத்தையா முரளிதரன். இலங்கை அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இப்படத்தை எம்.எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை தர்மோசர் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனத்துடன் இணைந்து  'பாகுபலி' திரைப்படத்தில் நடித்த நடிகர் ராணா டகுபதியின் தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ளது. 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.