மக்கள் செல்வன் விஜய் சேதுபதின் துக்ளக் தர்பாரின் ஹீரோயின் இவரா?
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 01, 2019 06:47 PM
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்தின் ஹீரோயின் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவிருக்கும் ‘துக்ளக் தர்பார்’ என்ற திரைப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.
அரசியல் ஃபேன்டஸி டிராமாவா உருவாகவிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் ஹிதாரி நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது விஜய் சேதுபதி ‘சங்கத் தமிழன்’ ஷூட்டிங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ‘கடைசி விவசாயி’, முத்தையா முரளிதரனின் பயோபிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும், ‘லாபம்’, ‘மாமனிதன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.