Breaking: விஜய் சேதுபதி , யுவன் உள்ளிட்டோருக்கு தமிழக அரசின் விருது - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கலைமாமணி விருது இந்தியாவின் தமிழக அரசினால் ஆண்டுதோறும் திரைப்படங்கள், நாடகங்கள், இசை, ஓவியம் உள்ளிட்ட கலைகளில் திறம்பட செயல்படும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.

Tamilnadu Government announces Kalaimamani award date Yuvan, Vijay Sethupathi

இந்த விருது தமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாடு இயக்ககத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தினால் 1954 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. தற்போது 8 ஆண்டுகளுக்கும் சேர்த்து விருதுகள் அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில் இந்த வருடத்துக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 13 ஆம் தேதி கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி 2011 ஆம் ஆண்டுக்கான பாண்டு, ஆர்.ராஜசேகர், நடிகை குட்டி பத்மினி, பின்னணிப் பாடகி பி.எஸ்.சசிரேகா, நடன இயக்குநர் புலியூர் சரோஜா உள்ளிட்ட பல்வேறு கலைத்துறை சார்ந்த 30 கலை வித்தகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2012 ஆம் ஆண்டு கலைமாமணி விருதுக்கு டி.ராஜஸ்ரீ, பி.ஆர்.வரலட்சுமி, இயக்குநர் சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோருக்கும், 2013 ஆம் ஆண்டுக்கு பிரசன்னா, ஆர்.பாண்டியராஜன், டி.பி.கஜேந்திரன், நடிகைகள் குமாரி காஞ்சனா தேவி, சாரதா, நளினி, நாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மா, திரைப்பட பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ், உள்ளிட்ட 30 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டுக்காக நடிகர்கள் கார்த்தி, சரவணன், பொன்வண்ணன், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்டோருக்கும் அறிவிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டுக்கு விஜய் ஆண்டனி, யுகபாரதி, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, கானா பாலா, உள்ளிட்டோருக்கும், 2016 ஆம் ஆண்டுக்கு சசி குமார் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சூரி, உள்ளிட்டோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டுக்கு விஜய் சேதுபதி, சிங்கமுத்து, பிரியாமணி, யுவன் சங்கர் ராஜா, உள்ளிட்டோருக்கும், 2018 ஆம் ஆண்டுக்கு  ஸ்ரீகாந்த், சந்தானம், ஏ.எம்.ரத்னம், ரவி வர்மன், உன்னி மேனன் உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.