Comrade Anthem - விஜய்தேவரகொண்டா, விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் பாடிய பாடல் வீடியோ இதோ !
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 18, 2019 04:50 PM
‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் காம்ரேட்’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘Comrade Anthem’ பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘டியர் காம்ரேட்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். யாஷ் ரங்கினேனி தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘Comrade Anthem’ பாடலை தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் பாடியுள்ளனர். இந்த பாடலை தமிழில் நடிகர் விஜய் சேதுபதியும், மலையாளத்தில் துல்கர் சல்மானும், தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து பாடியுள்ளனர். ‘என் இனிய தமிழ் மக்களே .. சகாக்காளே .. தெலுங்கு பிரஜல்லாரா ..' என்று தொடங்கும் வெளியாகியுள்ளது. இந்த பாடல் இணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீதா கோவிந்தம்’ திரைப்படத்திற்கு பிறகு ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
COMRADE ANTHEM - விஜய்தேவரகொண்டா, விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் பாடிய பாடல் வீடியோ இதோ ! வீடியோ