legend updated

தங்கம் வென்ற மங்கையை நேரில் வாழ்த்திய மக்கள் செல்வன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சர்வதேச பேட்மின்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அரசுப்பள்ளி மாணவி ஜெர்லின் அனிகாவை நேரில் சந்தித்து நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்தார்.

Makkal Selvan Vijay Sethupathi wishes World Deaf Youth Badminton, Gold Medal Winner Jerlin Anika

தைவானில் நடைபெற்ற சர்வதேச காது மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மின்டன் போட்டியில், தங்க பதக்கம் வென்ற காரைக்குடியை சேர்ந்த பள்ளி மாணவி ஜெர்லின் கலந்துக் கொண்டார். இந்த போட்டியில் இந்தியா சார்பாக கலந்துக் கொண்டு தங்கப்பதக்கம் வென்ற மதுரை ஒளவை அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

சர்வதேச போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி ஜெர்லின் அனிகாவை நடிகர் விஜய் சேதுபதி காரைக்குடியில் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘சங்கத்தமிழன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஷூட்டிங்கிற்கு இடையே, மாணவி ஜெர்லினை விஜய் சேதுபதி நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.