விஜய் பற்றி பரவிய செய்தி - விஜய் சேதுபதி காட்டமான ரியாக்‌ஷன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் ’மாஸ்டர்’. இதில் அவரோடு விஜய் சேதுபதி, ராதிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விஜய் வீட்டில் ஐடி ரெய்ட் நடந்தது. அதற்கான சென்னை சென்று நெய்வேலி திரும்பிய விஜய்க்கு ரசிகர்கள் படையாகத் திரண்டு பெரும் அன்பை வெளிப்படுத்தினர்.

vijay Sethupathi reacts on rumor on IT raid bigil and spreading Christianity

தொடர்ந்து இந்த படத்தில் விஜய் பாடிய பாடலான ’ஒரு குட்டிக் கத’ காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக  வெளியானது. இன்று டிவிட்டரில் பதிவிட்டுள்ள விஜய் சேதுபதி ’போயி வேற வேலை இருந்தா பாருங்கடா...' என்ற கேப்ஷனுடன் ஒரு குறிப்பை பகிர்ந்தார்.

அதில் தமிழகத்தில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப அவர் பெயரையும் சேர்த்து முக்கியமான சில தமிழ் நடிகர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும். அதற்காக சன்மானம் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ’பிகில்’ படத்தின் தயாரிப்பு பற்றியும் இதில் ஏதேதோ கூறப்பட்டிருந்தது. இதை பொருட்படுத்த வேண்டாம் என்ற தொனியில் விஜய் சேதுபதி ரியாக்ட் செய்திருக்கிறார்.

 

Entertainment sub editor