பாகுபலி படத்தில் நடித்த ரானா டகுபதி காடன் படத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபு சாலமன் இயக்கத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். ரானா டகுபதி, விஷ்னு விஷால், சோயா ஹுசைன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராகியுள்ளது. முழுக்க முழுக்க அடர்ந்த காட்டு பகுதியிலே படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இந்நிலையில் காடன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் நடிகர் ரானா டகுபதி கூறியதாவது, 'பாகுபலியில் பிரமாண்ட அரண்மனை நூறடி சிலை எல்லாம் எனக்கு வைத்தீர்கள், ஆனால் பிரபு சாலமன் என்னை எடுத்தவுடன் காட்டில் இறக்கிவிட்டுவிட்டார் என்று ராஜமௌளியிடம் சொன்னேன்' என அவர் கூறியுள்ளார். மேலும் 'பல மொழிகளில் தயாராகும் படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளுக்கும் ஒரு காட்சியை பலமுறை படமாக்கினோம், அடர்ந்த காட்டு பகுதியில் 200 நாட்களாக படப்பிடிப்பு நடந்தது' என அவர் கூறியுள்ளார்.