ஹே சினாமிகா வெற்றியை தொடர்ந்து.. பிருந்தா இயக்கும் புதிய படம்.. வெளியான சூப்பர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி ஆகியோர் நடிப்பில், நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம், 'ஹே சினாமிகா'.

new update about brinda next directorial after hey sinamika

கோவிந்த் வசந்தா இசை அமைத்திருந்த இந்த திரைப்படம், கடந்த மார்ச் மாதம், 3 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

Feel Good படமாக உருவாகி இருந்த ஹே சினாமிகா திரைப்படம், மக்கள் மத்தியிலும் நல்லதொரு வரவேற்பை பெற்றிருந்தது.

பிருந்தா இயக்கும் அடுத்த படம்

முன்னதாக, தமிழ், பாலிவுட், மலையாளம் என பல்வேறு மொழிகளில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து பிரபலம் அடைந்திருந்த பிருந்தா, ஹே சினாமிகா திரைப்படத்தை இயக்கியதன் மூலம், ஒரு சிறப்பான இயக்குனராகவும் அறிமுகமாகி இருந்தார். இந்நிலையில், பிருந்தா அடுத்ததாக இயக்கவுள்ள திரைப்படம் குறித்து, அசத்தல் தகவல் ஒன்று வெளி வந்துள்ளது.

new update about brinda next directorial after hey sinamika

கேரளாவில் நடக்கும் ஷூட்டிங்

பிரபல தயாரிப்பாளரான ஷிபு தமீன்ஸின் மகனை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து திரைப்படம் ஒன்றை பிருந்தா இயக்கி வருவதாகவும், இதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சி பகுதியில், தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

new update about brinda next directorial after hey sinamika

மேலும், ஷிபு தமீன்ஸ் மகனுடன் நடிகர் ஆர்கே சுரேஷ், தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

new update about brinda next directorial after hey sinamika

People looking for online information on Brindha, Hey Sinamika, P.L.Thenappan, RK Suresh, Shibu Thameens will find this news story useful.