BREAKING: அசோக் செல்வனுக்கு ஜோடியான பிரபல தமிழ் சினிமா நடிகை..? இயக்குனர் இவரா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் முக்கியமானவர் அசோக் செல்வன்.

AshokSelvan’s next directed by Karthik debutant

கடைசியாக மன்மதலீலை, சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல் படங்களில் நடித்திருந்தார். ஆர்.ரவீந்திரன் தயாரித்திருந்த ஹாஸ்டல் படத்தில் பிரியா பவானிசங்கர், சதீஷ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மலையாள ரீமேக்கான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. 

AshokSelvan’s next directed by Karthik debutant

அடுத்ததாக 'வேழம்' படத்தில் நடித்துள்ளார். ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் ஹிரோயினாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜூன் மாதம் 24-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. 

இதற்கடுத்ததாக, ரா. கார்த்திக் இயக்கத்தில் 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா, ஷிவதா ஆகிய கதாநாயகிகள் முக்க்ய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

AshokSelvan’s next directed by Karthik debutant

இந்நிலையில் அசோக் செல்வன், அடுத்த படமாக விஸ்வரூபம், விஸ்வரூபம்-2 படங்களின்  உதவி இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ஜூன் 8 அன்று இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

AshokSelvan’s next directed by Karthik debutant

அசோக் செல்வனுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

AshokSelvan’s next directed by Karthik debutant

People looking for online information on Ashok Selvan, Megha Akash will find this news story useful.