மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் ‘பகாசூரன்’… ரிலீஸ் எப்போது? லேட்டஸ்ட் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும் ‘பகாசூரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Draupathi Mohan G selvaraghavan pagaasooran release update

Also Read | ‘விக்ரம்’ படத்தில் சூர்யா கதாபாத்திரம் என்ன?… எதிர்பார்ப்பை எகிறவைத்த லோகேஷ்…. வைரல் Poster

நடிகராக செல்வராகவன்…

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான செல்வராகவன், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது.  இந்த இரண்டு படங்களிலும் அவரது நடிப்பு கவனிக்கப்பட்டதை அடுத்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். இதற்கிடையில் தனுஷுடன் நானே வருவேன் படத்தையும் செல்வராகவன் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா மற்றும் ஸ்விடீஷ் நடிகையான எல்லி அவ்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திலும் செல்வராகவன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Draupathi Mohan G selvaraghavan pagaasooran release update

திரௌபதி இயக்குனரின் பகாசூரன்…

இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடித்து வருகிறார். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன்.G. அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்கும் படத்திற்கு " பகாசூரன்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு…

பகாசூரன் திரைப்படத்தில் செல்வராகவனோடு ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு கடந்த ஏப்ரல் மாதம் சேலம் அருகில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் தொடங்கியது. செல்வராகவன், நட்டி இணைந்து நடிப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பகாசூரன் என்பது மகாபாரதத்தில் வரும் ஒரு அரக்கனின் கதாபாத்திரமாகும். அதை படத்தின் தலைப்பாக வைத்திருப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Draupathi Mohan G selvaraghavan pagaasooran release update

ரிலீஸ்..

இந்நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட இருப்பதாக  படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | BREAKING: அசோக் செல்வனுக்கு ஜோடியான பிரபல தமிழ் சினிமா நடிகை..? இயக்குனர் இவரா.?

தொடர்புடைய இணைப்புகள்

Draupathi Mohan G selvaraghavan pagaasooran release update

People looking for online information on Draupathi, Mohan g, Pagaasooran release update, Selvaraghavan will find this news story useful.