சேலையில் வந்த தமன்னா.. கதவை மூடி திறந்ததும் எப்படி மாறிட்டாங்க பாருங்க.. 'Viral' வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அதிகம் பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா.

Tamannaah new insta reels video in male getup gone viral

சமீப காலமாக, தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிலையில், கடந்த வாரம் அவர் நடித்திருந்த "F3" என்னும் திரைப்படம், வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

நடிகர் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் ஆகியோர் நடிப்பில், வெளியாகி இருந்த இந்த திரைப்படத்தில் தமன்னா, மெஹ்ரீன் பிர்சடா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ரசிகர்களை ஈர்க்கும் தமன்னா

முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி 'F3' திரைப்படம் உருவாகி இருந்தது. இதில், தமன்னாவின் ஜாலியான நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது. முன்னதாக, தமன்னா நடித்திருந்த ஆல்பம் பாடல் ஒன்றும், சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அதே போல, உலக புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை தமன்னா, நிகழ்வின் போது பல்வேறு விதமான உடைகளும் அவரது புகைப்படங்களும், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது.

Tamannaah new insta reels video in male getup gone viral

பச்சை நிற சேலையில்..

இந்நிலையில், நடிகை தமன்னா தற்போது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று, ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பொதுவாகம், மிகவும் பிசியாக நடித்து வரும் தமன்னாவின் போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களை எப்போது அவர் பகிர்ந்தாலும் அது இணையத்தில் அதிகமாக வைரலாகும். அந்த வகையில், தற்போது தமன்னா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், முதலில் பச்சை நிற சேலை அணிந்த படி, படு கிளாமராக நின்று கொண்டு நிற்கிறார்.

Tamannaah new insta reels video in male getup gone viral

ஆண் கெட்அப்பில் மாறிய தமன்னா

பின்னர், அங்கிருக்கும் கதவை அடைத்த படி உள்ளே போகும் தமன்னா, அங்கிருந்து வெளியே கதவைத் திறந்து கொண்டு திரும்பி வரும் போது, ஆளே வேற மாதிரியாக வந்து விடுகிறார். அப்படியே மாறி, ஆணைப் போல மீசை வைத்த படி, ஒரு புதிய கெட்அப்பில் வந்து நிற்கிறார் தமன்னா. F3 படத்தில் இதே போன்று ஆண் வேடமிட்டு, வருகிறார் தமன்னா. அதனைக் குறிப்பிட்டு தான், இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். தன்னுடைய கேப்ஷனிலும் F3 படம் குறித்து பகிர்ந்திருந்தார் தமன்னா.

 

இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Tamannaah new insta reels video in male getup gone viral

People looking for online information on F3, F3 Movie, Tamannaah, Viral video will find this news story useful.